அ.தி.மு.க.விற்கு தலைமை தாங்கி அனைவரையும் ஒன்றிணைப்பேன்- சசிகலா

தி.மு.க அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை என போகும் இடங்களில் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏழை-எளிய மக்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்துவது நல்லதல்ல.
அ.தி.மு.க.விற்கு தலைமை தாங்கி அனைவரையும் ஒன்றிணைப்பேன்- சசிகலா
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள தனது வீட்டில் இன்று அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செய்தார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணாவின் பாதையில் நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம். நேரம் வரும்போது அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு செல்வேன். நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி தற்போது பழைய பழனிசாமியாக இருக்கிறாரா? இல்லையா? என்பதை நீங்கள் தான் கூற வேண்டும்.

நிச்சயமாக அ.தி.மு.க.விற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன். வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க ஒன்றிணைந்து நல்ல வெற்றிகளை பெறும். நான் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் ஒன்றாக தான் உள்ளோம்.

தி.மு.க அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை என போகும் இடங்களில் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏழை-எளிய மக்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்துவது நல்லதல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com