தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் 2 படகுகளை மீட்கவும் மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும்.
ஜிகே வாசன்
ஜிகே வாசன்
Published on

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நேற்று முன்தினம் நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்..

நள்ளிரவில் அப்பகுதிக்கு வந்த இலங்கை மீனவர்கள், 21 தமிழக மீனவர்களை சிறைப்பிடித்து, 2 படகுகளையும் பறிமுதல் செய்த போது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் 21 தமிழக மீனவர்களை கைது செய்து, 2 படகுகளையும் இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

இதனால் தமிழக மீனவர்களின் குடும்பங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை இனியும் தொடரக்கூடாது.

தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.

தற்போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் 2 படகுகளை மீட்கவும் மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com