காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 16-வது தங்கம் - துப்பாக்கி சுடுதல் போட்டியில் அனிஷ் பன்வாலா அசத்தல்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றார். #CWG2018
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 16-வது தங்கம் - துப்பாக்கி சுடுதல் போட்டியில் அனிஷ் பன்வாலா அசத்தல்
Published on

சிட்னி:

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர். இன்று மகளிருக்கான 50 மீ ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வினி சவாந்த் தங்கப் பதக்கம் வென்றார்.

அதன்பின்னர் ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கம் வென்று அசத்தினார். இது இந்தியாவுக்கு கிடைத்த 16-வது தங்கம் ஆகும்.

இதன்மூலம் 16 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 34 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது. #CWG2018

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com