சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவு

மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்க உள்ள பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லாவுக்கு, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவு
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில், பா.ஜ.க. எம்.பி. ஓம் பிர்லா, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாபண்டி பாராளுமன்றத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்க உள்ள பா.ஜ.க.வின் ஓம் பிர்லாவுக்கு, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவிக்க தீர்மானித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com