கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுக்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் பங்கேற்ற அதிகாரிகள் அனைவரும் சமூக விலகலை கடைப்பிடித்தனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை (கோப்பு படம்)
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை (கோப்பு படம்)
Published on: 

சென்னை:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு வருகிற ஏப்ரல் 14ந்தேதி வரை அமலில் இருக்கும். அதே சமயம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. கொரோனா பரவாமல் தடுக்க சமூக விலகலை கடைப்பிடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்ட குழுக்களுடன் தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். அனைவரும் இடைவெளி விட்டு இருக்கைகளில் அமர்ந்து, சமூக விலகலை கடைப்பிடித்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com