கருணாநிதி பெயரில் சிற்றுண்டி - திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு கருணாநிதி பெயரில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு முக.ஸ்டாலின் முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்
Published on

சென்னை:

புதுச்சேரி சட்டசபையில் இன்று முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய முதல்வர் நாராயணசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பாக கருணாநிதி பெயரில் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிவித்திருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு கருணாநிதி பெயரில் சிற்றுண்டி வழங்கும் திட்ட அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  கருணாநிதி கழகம் வளர்த்த மாநிலத்தில் அவர் பெயரால் ஒரு திட்டம் தொடங்கியிருப்பது தனக்கு பெருமகிழ்ச்சியை தருவதாகவும் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும் கருணாநிதி பெயரில் சிற்றுண்டி திட்டத்தின் மூலம் கோடானகோடி திமுக தொண்டர்கள் மனதில் முதல்வர் நாராயணசாமி இடம் பெற்றுவிட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com