சூப்பரான கேழ்வரகு இனிப்பு அடை

கேழ்வரகில் இனிப்பு சேர்த்து அடை செய்தால் அருமையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று கேழ்வரகு இனிப்பு அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான கேழ்வரகு இனிப்பு அடை
Published on

கேழ்வரகு மாவு - 1 கப்,
வெல்லம் அல்லது கருப்பட்டி - 3/4 கப்,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
ஏலக்காய்த்தூள் - சிறிது,
பொடித்த முந்திரி - சிறிது,

நெய் - தேவையான அளவு.

கருப்பட்டி அல்லது வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

வெல்லக்கரைசல் சற்று கெட்டியானதும், இத்துடன் தேங்காய்த்துருவல், கேழ்வரகு மாவு, ஏலக்காய்த்தூள், நெயில் வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

சூப்பரான கேழ்வரகு இனிப்பு அடை ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com