கால்சியம், நார்ச்சத்து மிகுந்த கேழ்வரகு டிரை ஃப்ரூட்ஸ் மில்க் ஷேக்

கேழ்வரகில் அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. கேழ்வரகில் அதிக அளவில் புரதம் உள்ளது.
கால்சியம், நார்ச்சத்து மிகுந்த கேழ்வரகு டிரை ஃப்ரூட்ஸ் மில்க் ஷேக்
Published on

தேவையான பொருட்கள்

கேழ்வரகு – 50 கிராம்

பாதாம், முந்திரி, திராட்சை (ஊற வைத்தது) – தலா 4

பேரீச்சை – 5

காய்ச்சியப் பால் – 200 மி.கி

ஏலப்பொடி – 1 தேக்கரண்டி

நாட்டு சர்க்கரை – சுவைக்கேற்ப

செய்முறை:

ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சையை சிறிது பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

முதல்நாள் இரவில் ஊற வைத்த கேழ்வரகை நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சக்கையை மீண்டும் சிறிது நீர் விட்டு அரைத்து வடிக்கட்டவும். இப்போது இரண்டு கேழ்வரகு பாலையும் ஒன்றாக சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் காய்ச்சவும்.

அதனுடன் அரைத்த பாதாம் விழுது, மீதம் உள்ள பால், ஏலப்பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் காய்ச்சி இறக்கவும்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த சத்தான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு டிரை ஃப்ரூட்ஸ் மில்க் ஷேக் தயார்.

லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

X

Maalai Malar
www.maalaimalar.com