அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ‘மெர்சல்’

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படம் அமெரிக்க வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளது.
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ‘மெர்சல்’
Published on

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக நிலவிய வந்த பிரச்சனைகளுக்கு முடிவு எட்டப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. விஜய் ரசிகர்களும் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்து வருகின்றனர். விரைவில் வருகிற 26-ஆம் தேதி மெர்சல் படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், ‘மெர்சல்’ படத்திற்கு உலக அளவிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

வெளிநாடுகளில் பாலிவுட் படங்களான அமீர் கானின் `சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' மற்றும் அஜய் தேவ்கனின் `கோல்மால் அகேன்' படங்களை விட விஜய்யின் மெர்சல் வசூலில் முன்னணியில் உள்ளது.

அதேநேரத்தில் அமெரிக்காவில் மட்டும் ‘மெர்சல்’ 1 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க வசூலில் முதல் 5 இடங்களில் 4-வது இடத்தில் உள்ளது. ரஜினியின் கபாலி, எந்திரன், லிங்கா படங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ள நிலையில், விஜய்யின் ‘மெர்சல்’ 4-வது இடத்திலும், கமலின் விஸ்வரூபம் 5-வது இடத்திலும் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com