வீட்டில் சிவலிங்கம் 
ஆன்மிகம்

வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா?

சிவலிங்கத்திற்கு துளசியை வைத்து வழிபடுதல் கூடாது.

என்மனத் இயம்பும் எம்பிரான் அம்பலம் விடுத்உய்க்க

நன்மனம் விரும்பி நாட்டினர்கொள் நல்லுயிராய் வந்தனன்

நன்நீர்பொதிய திருநீறுபூச அறுமலஇலை சாற்றுங் காற்சிலம்பின

தொழுவார் வலுவா அன்ன மிசைத்தே அவனருள்வனனே!

சிவ பெருமானின் பலவிதமான வடிவங்களில் ஒன்று லிங்க சொரூபம். இது அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று வடிவங்களையும் குறிப்பதாகும். மேலும் சிவலிங்கத்தினுள் அணைத்து தெய்வங்களும் வசிப்பதாக ஐதீகம்.

மஞ்சளை பிடித்துவைத்தாலே பிள்ளையார் வந்து அருள்பாலிப்பார் என்பது போல, யார் ஒருவர் தமது மனதை ஒருநிலைப்படுத்தி தூய்மையான என்னத்துடன் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு இறைவன் காட்சி தருவார். அவ்வகையில் சிவனை வழிபட ஒரேயொரு வில்வ இலை இருந்தாலே போதுமானது.

வழிமுறைகளை:

இருப்பினும் வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வழிபாடும் போது ஒரு சில வழிமுறைகளை முறைப்படி பின்பற்றுவதும் அவசியம்.

சிவலிங்கத்தை தமது வீடுகளில் வைத்து வழிபட நினைப்பவர்கள், ஸ்படிகம், கருங்கல், மார்பிள் போன்ற பல கற்களால் ஆன சிவலிங்கத்தையும், உலோகங்களால் ஆன சிவலிங்கங்களையும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அளவில் சற்று சிறியதாகவும் தத்தம் வசதிக்கேற்பவும் வைப்பது நலம்.

ஏனெனில் தெய்வ சிலைகளின் உயரம் பொருத்து அதற்கு அன்னமிட வேண்டும் என்று வேதங்கள் கூறுகிறது. சிலைகளை வீட்டில் வைத்து வழிபட்டால் தினமும் அதற்கு ஏதாவதொரு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டியதும் அவசியம் ஆகும்.

சிவலிங்கத்தை வீட்டில் வைப்பதற்கும் ஒரு சில வழிமுறைகள் உண்டு. அபிஷேக நீர் சிவலிங்கத்தின் யோனியிலிருந்து வடக்கு திசை நோக்கிய படி பூமியில் விழும் வண்ணமாக சிவலிங்கத்தை வைக்க வேண்டும். சிவலிங்கம் வைக்கும் இடத்தினை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது. நேரடியாக தரையில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும்.

சைவம் கூறுவது என்ன?

சிவலிங்கம், வீட்டில் வைப்பதால் அவருடன் பார்வதி விநாயகர், முருகன் போன்ற சிலைகளையும் வைத்து குடும்ப சமேதரராய் வழிபடுவது இன்னும் சிறப்பு சேர்க்கும். தனியாக வைப்பதென்பது தவக்கோலத்தைக் குறிக்கும் என்பதால் அதனை தவிர்பது இல்லறத்திற்கு நலம் சேர்க்கும்.

சைவ வழிபாடுகளில் சிறப்பு பெற்ற நாட்களில், வீட்டினை சுத்தம் செய்து, தூபதீபம் கொண்டு ஒரு அமைதியான சூழலை ஏற்படுத்தல் வேண்டும். சிவலிங்கத்திற்கு வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக அபிஷேகம் செய்ய வேண்டும்.

பஞ்சாமிர்தம்,பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு, குங்குமம், சந்தனம், பன்னீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்வது சிறப்பு. குறிப்பாக மஞ்சளை பயன்படுத்தக்கூடாது.

பலவகை மலர்கள், வில்வ இலைகள் போன்றவற்றை கொண்டு அலங்கரித்து, பின் தமக்கு தெரிந்த தேவாரப் பாடல்களை பாடி வணங்குவது மிகவும் சிறப்பிற்குரியது. சிவன் இசைக்கும், அபிஷேகத்திற்கும், மன அமைதிக்கும் இணங்கி அருள் தரக்கூடியவர். அதேபோல் மறந்தும் துளசியை வைத்து வழிபடுதல் கூடாது.

சிறிய அளவே நைவேத்தியம் வைத்து படைத்திருந்தாலும் அதனை மற்றவர்கள் யாருக்கேனும் பங்கிட்டு கொடுத்து, தானும் உண்பது மிகவும் சிறப்பு.

முதலில் சோதனைகள் அதிகமாக வருவது போலவும் பயமூட்டும் கனவுகள் வருவது போலும் தோன்றலாம். அனால் இது சிவகணங்கள் வீட்டிற்கு வந்துபோவதைக் குறிக்கும் அறிகுறியாகும். தொடார்ந்து ஒருவர் நல்லமுறையில் சிவனை வழிபட்டால், தமது வாழ்வில் ஏற்படும் மாற்றத்தை நன்கு உணரலாம்.

சிவனை வழிபடுவோர்க்கு இம்மை மறுமைகளில் துன்பங்கள் இல்லை என்கிறது சைவம்.

ஓம் நமசிவாய!

திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்!!