உலகம்

அமெரிக்க மேலாதிக்கத்தின் முடிவு - ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி அறிக்கை

இரு அவைகளிலும் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி பெரும்பான்மை இழந்துள்ளது.

அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்ப் கட்சி பெரும்பான்மை இழந்துள்ள நிலையில் ஈரான் உச்ச தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் நடந்த இடைக்கால தேர்தலில், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை என இரு அவைகளிலும் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி பெரும்பான்மை இழந்துள்ளது.

இதனால் அவரால் புதிய மசோதாக்களை இயற்றி அதை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது டிரம்ப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

காமேனி அறிக்கை

இந்நிலையில் இது தொடர்பாக ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "அமெரிக்கா, ஈரானை நிபந்தனையின்றி சரணடையக் கட்டாயப்படுத்த முயற்சிக்கிறது. இது ஆக்கிரமிப்பை மட்டுமே அதிகரிக்கும்.

மேலாதிக்க எதிரியிடம் சரணடைவதை ஈரான் பரிசீலித்தாலோ அல்லது அந்தத் திசையில் சிறிதளவு சாய்வை காட்டினாலோ, இதுவரை அடைந்த மாபெரும் சாதனைகள் வீணாகிவிடும்.

தியாகிகளின் இரத்தமும், ஒட்டுமொத்த தேசத்தின் தியாகமும் வீணாகிவிடும். மேலும், இது ஆணவமிக்க எதிரிக்கு தைரியமூட்டி, இன்னும் பெரிய கோரிக்கைகளை முன்வைக்கவும், மேலும் போர்களையும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் தொடங்கவும் வழிவகுக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஈரான் ஒருபோதும் சரணடையாது.

கட்சிகள் மாறுவதோலோ அல்லது அமெரிக்காவிற்கு சலுகை வழங்குவதாலோ ஈரான் மீதான அந்நாட்டின் விரோத போக்கு மாறாது. இதற்கு மாறாக நம்புபவர்கள் பெரும் தவறு செய்கிறார்கள்.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மீண்டும் நடந்தால் போரின் தாக்கம் விரிவடையும். தனது மேலாதிக்கத்தின் முடிவு வெகு தொலைவில் உள்ளதாக அமெரிக்கா கருதுகிறது. ஆனால், அது அருகில் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.'' என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT