உலகம்

மெஹந்தி போடும் வேலையையும் பறிக்கிறதா இயந்திரம்? தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா வெளியிட்ட வீடியோ வைரல்

திருமணம், பண்டிகை உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் பெண்களின் கைகளில் மெஹந்தி கலைஞர்கள் பல மணி நேரம் செலவிட்டு அழகிய வடிவங்களை உருவாக்குவது வழக்கம்.

மெஹந்தி டிசைன்

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. மனிதர்கள் செய்து வந்த பல்வேறு பணிகளை இயந்திரங்கள் செய்யத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது மெஹந்தி போடும் பணியிலும் இயந்திரம் களமிறங்கியிருப்பதாக வெளியாகியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்ஷ் கோயங்கா

ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ஒரு இயந்திரம் ஒருவரின் கையில் சிக்கலான மெஹந்தி வடிவமைப்பை இடுவது போல் காணப்பட்டது. அந்த வீடியோவில், தாரா மெஹந்தி டிசைன் என்று பெயரிடப்பட்ட ஒரு இயந்திரம், மெல்லிய ஊசி போன்ற முனைகளைப் பயன்படுத்தி கையில் சிக்கலான வடிவங்களை உருவாக்குவது போன்று காட்டப்பட்டது.

மனித வேலையை பறிக்கும் இயந்திரம்

பொதுவாக திருமணம், பண்டிகை உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் பெண்களின் கைகளில் மெஹந்தி கலைஞர்கள் பல மணி நேரம் செலவிட்டு அழகிய வடிவங்களை உருவாக்குவது வழக்கம்.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோவில், மனித உதவி இன்றி இயந்திரமே அந்த பணியை மேற்கொள்வது போன்று தெரிகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த ஹர்ஷ் கோயங்கா இன்னும் சில வேலைகள் போய்விட்டது என்ற பொருளில் அவர் பதிவிட்டுள்ளார்.

ஏஐ வீடியோவா?

இதற்கிடையே, இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. சில சமூக வலைதள பயனர்கள், வீடியோவில் காணப்படும் காட்சிகள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இது ஏஐ மூலமாக உருவாக்கப்பட்டதிற்கான எந்த ஆராய்சியும், அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை

SCROLL FOR NEXT