உலகம்

Earthquake: ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்.. Hormuz ஜலசந்தி அருகே அதிர்வு

பந்தர் அப்பாஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிர்வு.இதே வாரத்தின் தொடக்கத்திலும் ஏற்பட்டது.

மாலை மலர்

தெற்கு ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் நகருக்கு அருகே ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலை 3.17 மணிக்கு பந்தர் அப்பாஸ் நகருக்கு மேற்கே சுமார் 74 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

பந்தர் அப்பாஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் லேசான அதிர்வுகளை உணர்ந்தனர்,

உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியின் அருகேயும் அதிர்வு உணரப்பட்டது.

4.1 என்பது மிதமான நிலநடுக்கமாகக் கருதப்படுவதால், பெரிய அளவிலான உயிர்ச் சேதமோ அல்லது கட்டிடப் பாதிப்புகளோ இதுவரை பதிவாகவில்லை.

இதே வாரத்தின் தொடக்கத்தில், ஈரானின் பார்ஸ் மாகாணத்தில் உள்ள கெராஷ்பகுதியில் ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.