உலகம்

மகாராஷ்டிரா அமைச்சரின் உறவினர் சுவீடன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி.!

மறைந்த மத்திய அமைச்சர் பாலாசாகேப் விகே பாட்டிலின் பேத்தி.

மகாராஷ்டிராவுடன் தொடர்பு

நிலா விகே படேல் சுவீடனில் பிறந்தவர். எனினும், தனது சிறு வயதின் பெரும்பகுதியை மகாராஷ்டிராவின் அகமதுநகரில் கழித்துள்ளார்.

அவர் மகாராஷ்டிராவை சேர்ந்த கல்வியாளர் அசோக் விகே படேலின் மகளும் மறைந்த முன்னாள் மத்திய மந்திரி பாலாசாகேப் விகே படேலின் பேத்தியும், மகாராஷ்டிரா மந்திரி ராதாகிருஷ்ண விகே படேலின் சகோதரி மகளும் ஆவார்.

ஆசியாவின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிறுவனரான வித்தல்ராவ் விகே பாட்டிலின் கொள்ளுப் பேத்தி.

நிலா விகே

நிலா விகே பாட்டில் சுவீடனில் பிறந்தவர் ஆவார். கோதென்பர்க் வணிகப் பள்ளியில் பொருளாதாரம் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும், எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். மேலும், மாட்ரிட்டில் உள்ள கம்ப்ளூட்டென்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ளார்.

2020 முதல், அவர் ஒரு உலகளாவிய சேவை வலையமைப்பான பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அங்கு அவர் உத்தி, மேலாண்மை, தொழில்நுட்பம் மற்றும் இடர் ஆலோசனை சேவைகளை வழங்கி வருகிறார்.

தேர்தலில் வெற்றி

மகாராஷ்டிராவை சேர்ந்த நிலா விகே படேல் சுவீடன் நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுவீடனில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், ஸ்டாக்ஹோம் சிட்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

41 வயதான நிலா விகே படேல், சுவீடன் நாட்டின் 349 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் கிரீன் கட்சி சார்பில் எம்.பி.யாக செயல்பட உள்ளார்.

குழந்தைகள் நலன்

சுவீடன் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து பேசிய நிலா, குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.

வாக்களிக்க முடியாதவர்களின் குரலாக இருக்க விரும்புகிறேன். ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல எதிர்காலத்துக்கான வாய்ப்பு கிடைக்கும் சமூகத்தை உருவாக்க பங்களிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய நிலா இயற்கையை பாதுகாத்தலில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் . தூய்மையான குடிநீர், இயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் மனிதர்களால் ஏற்படும் இயற்கை பேரழிவுகளை குறைத்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்

இந்தியாவை நேசிக்கிறேன்

சுவீடனில் வாழ்ந்து வந்தாலும் இந்தியாவுடனான தனது தொடர்பு தொடர்ந்து இருப்பதாக நிலா கூறியுள்ளார்.

இந்தியாவில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் நிறைபேர் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.எனது தாத்தாவை மிகவும் நினைத்துக் கொள்கிறேன். அவர் எனக்கு 15 வயதாக இருந்தபோது மாநில பட்ஜெட்டை படிக்கச் சொன்னார். அவரை பெருமைப்படுத்துவேன் என்று நம்புகிறேன்" என நிலா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT