ஐரோப்பாவில் 2027-ல் பிரம்மாண்டமாக உதயமாகிறது 'இயற்கை நிலத்தடி அருங்காட்சியகம்'..!

கோபன்ஹேகனின் வரலாற்றுச் சிறப்புமிக்க தாவரவியல் பூங்காவிற்கு அடியில் இந்த காட்சியகமானது உருவாக இருக்கிறது.
Natural History Museum
Published on

காட்சியகம்

டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகனின் நகரத்தில் உள்ள தாவரவியல் பூங்காவின் உள்ளே மிகப்பெரிய புதிய இயற்கை நிலத்தடி அருங்காட்சியகமானது 2027ஆம் ஆண்டு உருவாக இருக்கிறது. திட்டத்திற்கான பணிகள் 2019ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட நிலையில் , பல்வேறு திட்ட வடிவமைப்பு மாற்றம் மற்றும் நிதி பிரச்சனைகளால் திட்ட பணிகள் தாமதமான நிலையில் , வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் 6 அன்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அம்சங்கள்

தரைக்கு கீழ் அமையவிருக்கும் இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய சிறப்பம்சங்களாக கேலரிகள் உருவாக இருக்கின்றன. அதில் டென்மார்க்கின் இயற்கை வரலாறு , கடல் உலகம், மனிதர்களின் பரிணாம வளர்ச்சி, உயிரினங்களின் தோற்றம், ஆர்டிக் பகுதியின் இயற்கை ஆகியவை அமைய இருக்கின்றன . இதன் மூலம் ஒருவர் அருங்காட்சியக்த்திற்குள் செல்லும் போது பூமி , மனிதன் வாழ்க்கை , கடல் அகியவற்றை நாம் ஒருசேர காண முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாதிரிகள்

இந்த அருங்காட்சியக்த்தில் முக்கியமானதாக 14 மில்லியன் இயற்கை வரலாற்று மாதிரிகள் இடம்பெற உள்ளது . அதில் 400 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட 17 மீட்டர் நீளமுள்ள டிப்ளோடோகஸ் எலும்புக்கூடு மற்றும் டி-ரெக்ஸ் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட டைனோசர் எச்சங்கள் இடம்பெறுகின்றன.

டெக்னாலஜி

மேலும் அருங்காட்சியகத்தில் 3D டிஜிட்டல் ஸ்கேன்னை பயன்படுத்தி தொடுதிரை மூலம் அருங்காட்சியகத்தை சுற்றி பார்க்கலாம் , குறிப்பாக காட்சியகத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்தை பற்றியும் நம்மலால் எளிதாக தெரிந்துக்கொள்ள முடியும்.

கட்டணம்

தாவரவியல் பூங்காவிற்குள் நுழைய கட்டணம் இல்லை, அதே சமயம் புதிய அருங்காட்சியகத்திற்கான நுழைவுச்சீட்டு பெரியவர்களுக்கு சுமார் .£13.22 மற்றும் மூன்று முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு .£5.75 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com