ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி கபில சந்திரசேன் மற்றும் அவரது மனைவி சம்பந்தப்பட்ட ஏர்பஸ் பரிவர்த்தனைகள் தொடர்பான வழக்கில் சந்தேக நபராக இருந்த இருவரும் உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா பிணையாளார்களாக இருந்து வந்தனர்.
விசாரணையின் போது நீதிமன்றத்தில் இருவரும் பிணையாளர்களாக ஆஜராகாத காரணத்தால், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி நீதவான் பாசன் அமரசேன அவர்களுக்கு எதிராகப் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.
இவ்வழக்கு தொடர்பாகப் பிணையில் விடுவிக்கப்பட்டு தற்போது வெளிநாட்டில் இருக்கும் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோர் ஜாமீன்தாரர்களாக இருந்த நிலையில் பிணை வழங்கப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சந்தேக நபரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஜாமீன் அளித்தவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், நீதிபதி அவர்களுக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பித்தார். வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன்தாரர்கள் சார்பாக ஆஜராகி இருந்த வழக்கறிஞர், அரவிந்த டி சில்வாவின் தாயார் காலமானதாலும், அவரது இறுதிச் சடங்கு நடைபெறுவதாலும் அவர்களால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பிடிவாரண்ட் திரும்பப் பெறுவதற்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, இவ்விவகாரம் தொடர்பான உரிய ஆவணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், சூழ்நிலைகளை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரவும் நீதிபதி உத்தரவிட்டார்.