

பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் தேசிய காவல்துறை அதிகாரி செனட்டர் டெலா ரோசாவிற்கு எதிரான பிடியாணையை பிறப்பித்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டேவின் 2016 முதல் 2019 ஆட்சி காலத்தில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை அதிகாரியாக ரோசா பணியாற்றி வந்தார்.
அப்போது நடந்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 32 நபர்கள் சட்டத்திற்கு புறம்பாக கொல்லப்பட்டதாக ரோசா மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த மனித குலத்திற்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்ட ரோசா, கைது நடவடிக்கையை தடுப்பதற்காக நெதர்லாந்திற்கு தப்பி சென்றார்.
இந்நிலையில் காவல் அதிகாரி ரோசாவிற்கு எதிரான கைது ஆணையை நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரோசா, “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய ஒப்பந்தத்தில் இருந்து, கடந்த 2019ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் விலதியதால், இந்த நீதிமன்றத்தின் பிடியாணை சட்டவிரோதமானது” என்று கூறியுள்ளார்.