சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் பயண நிறுவனமான ட்டிரிப்.காம் சுமார் ரூ.6.4 கோடி மதிப்பிலான விண்வெளி சுற்றுலா பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அறிமுகம் சமூகவலைத்தளங்களில் கடும் விலை மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது.
ட்டிரிப்.காம் வழங்கும் இந்த சொகுசுப் பயண திட்டத்தில், முதலில் 4 நாட்கள் அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னர் 5-வது நாளில் நியூ மெக்சிகோவில் இருந்து விர்ஜின் கேலக்டிக் விண்கலம் மூலம் சுமார் 90 நிமிடங்கள் துணை சுற்றுப்பாதை விண்வெளிப் பயணம் மேற்கொள்ளப்படும்.
விண்வெளிப் பயணத்தின்போது பயணிகள் சில நிமிடங்கள் எடையற்ற நிலையில் மிதக்கும் அனுபவத்தை பெறுவார்கள். மேலும், விண்கலத்தில் உள்ள 17 ஜன்னல்கள் வழியாக பூமியை விண்வெளியில் இருந்து பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
இந்த விலையில் விமானப் பயணத்திற்கு முந்தைய பயிற்சி, பயிற்சிக் காலத்திற்கான போக்குவரத்து மற்றும் தங்குமிடம், விண்வெளி உடை, அடையாள அட்டைகள் மற்றும் அனுபவத்தின் காணொளிகள் ஆகியவை அடங்கும். சர்வதேச விமானப் பயணங்கள், அமெரிக்க விசாக்கள் மற்றும் தனிநபர் காப்பீடு ஆகியவை இதில் சேர்க்கப்படவில்லை.
குறிப்பாக இந்த திட்ட பயணத்திற்கு இரண்டு வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளதாக சவுத் மார்னிங் போஸ்ட் செய்து வெளியிட்டுள்ளது.
இந்த பயணத்தின் விலை மற்றும் பாதுகாப்பு குறித்து சீன சமூக ஊடகங்களில் விவாதமானது வெடித்துள்ளது.
சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் பயண முகவரான ட்ரிப்.காம், அந்நாட்டின் ஆன்லைன் ஹோட்டல் முன்பதிவு சந்தையில் பாதிக்கும் மேற்பட்ட பங்கைக் கொண்டுள்ளதுடன், 2025-ஆம் ஆண்டில் உலகளவில் 1 டிரில்லியன் யுவானுக்கும் அதிகமான மதிப்புள்ள முன்பதிவுகளைக் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.