TNPSC - டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி - ஆகஸ்ட் 17-ந்தேதி தொடங்குகிறது!

நவம்பர் 1-ந்தேதி நடைபெற உள்ள குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
TNPSC - டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி - ஆகஸ்ட் 17-ந்தேதி தொடங்குகிறது!
Published on

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 17-ந்தேதி முதல் தொடங்குகின்றன.

குரூப்-2, 2ஏ தேர்வு

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி, கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

இங்கு பயிற்சி பெற்ற பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், 2026-ம் ஆண்டுக்கான குரூப்-2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உதவி ஆய்வாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-II, சிறை அலுவலர் உள்ளிட்ட மொத்தம் 821 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

குரூப்-2, 2ஏ தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி - ஆகஸ்ட் 17-ந்தேதி தொடங்குகிறது!

ஆன்லைன் பயிற்சி

நவம்பர் 1-ந்தேதி நடைபெற உள்ள குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான திட்டமிட்ட பயிற்சியை வழங்கும் வகையில், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 17-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகின்றன.

மொத்தம் 75 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகள், தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். பயிற்சியின் ஒரு பகுதியாக தொடர் மாதிரித் தேர்வுகள் மற்றும் தேர்வு நோக்கிலான பயிற்சிகள் நடத்தப்படும்.

மேலும், தேர்வுக்குத் தேவையான ஆதார நூல்கள் மற்றும் இ-புத்தகங்கள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வழங்கப்படும்.

வெற்றியை இலக்காகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ள இந்த பயிற்சி வகுப்பில் சேருவதற்கான பயிற்சிக் கட்டணம் ரூ.12,500 ஆகும்.

முன்பதிவு செய்யலாம்

இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், ‘TNPSC GROUP II, IIA ONLINE COACHING-2026’ என்று டைப் செய்து, தங்களது பெயர் மற்றும் தொடர்பு விவரங்களை 7550151584 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி முன்பதிவு செய்யலாம்.

இந்த தகவலை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் ச. வீரபாபு தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com