பெண்களை அவதூறாக பேசியதாக அளித்த புகாரில் இன்று காலை கைது செய்யப்பட்ட திமுக Gen Z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனின் கைது நடவடிக்கையை ரத்து செய்து எழும்பூர் 13வது குற்றவியல் நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலீசார் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்யவில்லை என நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.
இதை அடுத்து சரண் ஜெயராமன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சமூக வலைத்தளத்தில் தவெக பெண் நிர்வாகிகளை விமர்சித்ததாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு சரண் மீது பெண் நிர்வாகிகள் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதைதொடர்ந்து, இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவரது வீட்டின் மாடியில் வைத்து கொளத்தூர் போலீஸார் சரணை கைது செய்தனர். இதையடுத்து அவரை இன்று மாலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.
இந்நிலையில், போலீசார் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்யவில்லை என நீதிமன்றம் காட்டமாக தெரிவித்து சரணின் கைது நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.