நடந்த முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் இடதுசாரி கட்சிகளான சிபிஎம் ,சிபிஐ தனித்து போட்டியிட்டன. தேர்தல் முடிவில் இடதுசாரிகள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மிக குறைந்த அளவிலான வாக்குகளை கிடைத்து.இடதுசாரி கட்சிக்கு வாக்களித்த விவசாய மக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் நன்றி தெரிவித்தார். மக்களின் நலனுக்காகத் தங்கள் பயணம் தொடரும் என்று சிபிஎம் தலைவர் குறிப்பிட்டிருந்தார்
இந்த நிலையில் இந்த தேர்தல் முடிவு குறித்து பலவகையில் விமர்சனம் எழுந்து வருகிறது. விமர்சனம் எதுவாயினும் அது பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று சிபிஎம் தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
இடைத்தேர்தல் முடிவுகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்ற வாக்குகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான வெறுப்பு, எதிர்ப்பு, ஒவ்வாமை, நட்பு, நலன் என பல விதங்களிலும் கருத்துக்களும், அறிவுரைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.
ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு பரிசீலிப்போம்.
கம்யூனிஸ்டுகள் ஒழிய வேண்டும் என்று விரும்புகிற எங்களது எதிரிகளை அதற்குரிய முறையில் எதிர்கொள்வோம். கம்யூனிசத்திற்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்றும் அழிவில்லை. அழிக்கவும் முடியாது.
என்று தெரிவித்துள்ளார்.