அரிசி விலை உயர்வு ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லையா?- சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி

25 கிலோ அரிசி மூட்டையின் விலை கடந்த மாதம் ரூபாய் 1800 ஆக இருந்தது.
P Shanmugam
Published on: 

அரிசி விலை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த மாதம் என்ன விலையோ, எவ்வளவு உயரப் போகிறதோ? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

அரிசி விலை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. 25 கிலோ அரிசி மூட்டையின் விலை கடந்த மாதம் ரூபாய் 1800 ஆக இருந்தது.

இந்த மாதம் என்ன விலையோ, எவ்வளவு உயரப் போகிறதோ? அரிசி விலை ஆகாயத்தை நோக்கிப் பறக்கிறது என்பது மட்டும் உறுதி. ஆனால் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டவில்லை போலும்!

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com