தமிழக செய்திகள்

ஆளுநர் முக்கியமா? தமிழ்த்தாய் வாழ்த்து முக்கியமா? - 2 முறை தேசிய கீதம் குறித்து உதயநிதி கேள்வி

ஆளுநர் உரையானது ரீல்ஸ் போடுவதற்கு உதவுமே தவிர உண்மைக்கு உதவாது.

சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* மாண்புமிகு முதலமைச்சர் விஜய்க்கு திமுக எம்எல்ஏக்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.

* புதிய ஆட்சி அமைந்து 40 நாட்களை கடந்தநிலையில் ஆளுநர் உரையில் தவெக ஆட்சியில் செய்த சாதனை இல்லாதது ஏமாற்றமே.

* 40 நாட்களில் புதிய சாதனை, திட்டங்கள் இருக்கிறதா? என ஆவலுடன் காத்திருந்தோம். ஆனால் அதில் ஏமாற்றம் தான்.

* தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு முறையும் தேசிய கீதம் 2 முறையும் பாடப்பட்டதன் மூலம் அவையின் மரபு மீறப்பட்டுள்ளது.

* 2 முறை தேசிய கீதம் பாட வேண்டும் என இதற்கு முன்பும் ஆளுநர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

* ஆளுநர் வைத்த கோரிக்கையை எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கவில்லை.

* திமுக ஆட்சியில் இதே கோரிக்கை வைத்தபோது அதை நிராகரித்து பேரவையின் இறையாண்மையை காத்தோம்.

* பேரவையில் ஆளுநர் உரை வாசிக்கப்பட்ட நிலையில் நமது டெரிட்டரியை ஏன் ஆளுநரிடம் கொடுத்து விட்டீர்கள்?

சபாநாயகர்: எந்த அடிப்படையில் நாட்டுப்பண் இருமுறை பாடியது தவறு என கூறுகிறீர்கள்?

உதயநிதி: தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் பாடுவது தான் மரபு.

சபாநாயகர்: தமிழ்த்தாய் வாழ்த்தை பாட முடியாத சூழலை கடந்த காலங்களில் நாம் பார்த்தோம். தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டதில் என்ன தவறு இருக்கிறது.

உதயநிதி: தேசிய கீதத்தை 2 முறை பாட அனுமதித்தது சரி என்றால் தமிழ்த்தாய் வாழ்த்தையும் இருமுறை பாடியிருக்கலாமே.

* 2 முறை தேசிய கீதம் பாடிய நீங்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை இருமுறை பாடியிருக்க வேண்டியதுதானே?

* மரபை மீறி 2 முறை தேசிய கீதம் பாடியது ஏன் என்று தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம்.

* ஆளுநர் மகிழ்ந்தார் என கூறும் நீங்கள், தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை விட ஆளுநர் தான் உங்களுக்கு முக்கியமா?

* உங்களுக்கு ஆளுநர் முக்கியமா? தமிழ்த்தாய் வாழ்த்து முக்கியமா? என விளக்கம் தாருங்கள்.

* ஆட்டுக்கு தாடி, நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என பேரறிஞர் அண்ணா கூறினார்.

* ஆளுநர் உரையானது ரீல்ஸ் போடுவதற்கு உதவுமே தவிர உண்மைக்கு உதவாது.

சபாநாயகர்: அவையை பொறுத்தவரை யாரையும் தலையில் வைத்து கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. அவையை பொறுத்தவரை அவை தலைவரின் விருப்பத்திற்கு ஏற்ப தான் நடைபெறும்.

உதயநிதி: கள எதார்த்தத்திற்கும் ஆளுநர் உரைக்கும் மிகப்பெரிய வேறுபாடு எங்களுக்கு தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.