"கோவில் நிதியில் கார் பார்க்கிங் ஏன்?" - முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி!

கழிவறை வசதியில்லாத கோவிலுக்கு ரூ.10 கோடி மல்டி லெவல் கார் பார்க்கிங் எதற்கு தேவை?
TN Minister Ramesh - Ex MInister Sekar babu
Published on

அறநிலையத்துறை பள்ளி, கல்லூரிகள் நடத்தக்கூடாது என்பது பாஜகவின் நிலைப்பாடு, அந்த நிலைபாட்டில் அரசு உள்ளதா? என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறுகையில்,"கோவில் வருமானம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக செயல்படுத்தப்படும் என ஆளுநர் உரையில் கூறியிருந்தோம்.

கோவில் நிதியை பயன்படுத்தி அங்கு கழிப்பறை உள்ளிட்ட கட்டுமானம் மேற்கெள்ளப்படும் எனக் கூறினோம்.

கழிவறை வசதியில்லாத கோவிலுக்கு ரூ.10 கோடி மல்டி லெவல் கார் பார்க்கிங் எதற்கு தேவை?

திருமண மண்டபம் என கமர்ஷியல் பயன்பாட்டுக்காக அறநிலையத் துறை பணம் கடந்த ஆட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பழனியில் சித்த மருத்துவமனை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தர தயாராக இருந்தது, ஆனால் கடந்த ஆட்சி தடுத்தது.

நாங்கள் யாருக்கும் B டீமாக செயல்படு வேண்டிய அவசியமில்லை" என்றார்.

அமைச்சர் ரமேஷ்க்கு எதிராக பேசிய முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்," எம்எல்ஏக்களின் பரிந்துரை அடிப்படையில் தான் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

குன்னூரில் சுற்றுலா பயணிகளுக்கான மல்டி லெவல் பார்க்கிங் அமைப்பதன் மூலம் நகராட்சிக்கு வருவாய் என்பதால் அத்திட்டம் கொண்டு வரப்பட்டது" என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ரமேஷ்,"குன்னூர் விநாயகர் கோவில் நிலத்தில் கார் பார்க்கிங் பரிந்துரைத்தாலும் கோவில் நிதியில் செய்தது ஏன் என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

கோவில் நிதியை எடுத்து கார் பார்க்கிங் அமையுங்கள் என பக்தர்கள் கேட்டார்களா? நிம்மதியான தரிசனம்தான் தேவை" என்றார்.

பெரிய கோவில்களில் மல்டி பார்க்கிங் என்பது அத்தியாவசியமான ஒன்றுதான், அது தேவையில்லா எனக்கூறி முடியாது என உதயநிதி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com