தமிழக செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 26 ஆகஸ்ட் 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

Maalaimalar

பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்..!- சிபிஐ

* சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது.

* விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் அம்பலம்: சிபிஐ விசாரணை வேண்டும்! -அன்புமணி

* பாமகவின் உண்மை கண்டறியும் குழு தருமபுரியில் செய்தியாளர்களிடம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை தான் என்பதை மைசூர் மருத்துவமனை அளித்த உடற்கூறாய்வு அறிக்கை உறுதி செய்துள்ளது.

*3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு ஆணையிட வேண்டும்.

ஓணம் திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்! - முதலமைச்சர் விஜய்

* ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்!

* அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!

அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள்! - மு.க.ஸ்டாலின்

* மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம்.

* மாவேலியை வீழ்த்தப்பட்டவராக அல்லாமல், மக்களின் உள்ளங்களில் வாழும், வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த மன்னனாகக் கொண்டாடுவோம்.

மிலாது நபி நன்னாளில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்! - முதலமைச்சர் விஜய்

* இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!

* நபிகள் நாயகம் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்!