அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள்! - மு.க.ஸ்டாலின்

மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம்.
Onam Festival - MK Stalin
Published on

ஓணம் பண்டிகை

கேரள மக்கள் அனைவரும் பாகுபாடின்றி, மிகவும் மகிழ்ச்சியோடு எதிர்நோக்கும் ஒரு திருவிழா, ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் வரும் திருவோண நட்சத்திரமான இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மகாபலி சக்கரவர்த்தி

இந்நாளில் மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டிற்கு விஜயம் செய்வதாக நம்பிக்கை. எனவே, அவரை வரவேற்கும் நாளாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கேரளம்

ஓணம் திருநாளில் கேரளம் முழுவதும், புத்தாடைகள், பூக்கோலங்கள், விளையாட்டுப் போட்டிகள், பலகாரங்கள் என கொண்டாட்டம் களைக்கட்டும். கேரளம் மட்டுமின்றி தென்தமிழக மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது

மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் ஓணம் திருநாளையொட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம்.

பிறப்பால் எவரும் உயர்ந்தவரும் அல்லர், தாழ்ந்தவரும் அல்லர். எல்லார்க்கும் எல்லாம் என்பதே நம் இலக்காகட்டும். மாவேலியை வீழ்த்தப்பட்டவராக அல்லாமல், மக்களின் உள்ளங்களில் வாழும், வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த மன்னனாகக் கொண்டாடுவோம்.

மாவேலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும். அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com