சென்னை:
ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஈகை திருநாள் எனும் புனிதமான தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு மற்றும் நாடு முழுவதும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த புனித திருநாள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வளமை அளிக்கட்டும். மேலும், சமூகத்தில் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை வளர்த்து, வளமான நாட்டை உருவாக்கும் பணியில் ஒற்றுமையை வலுப்படுத்தட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.