ரம்ஜான் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி- தலைவர்கள் வாழ்த்து

ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இறைவன் அனைத்து நலன்களையும் வழங்கிட பிரார்த்திக்கிறேன்.
ரம்ஜான் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி- தலைவர்கள் வாழ்த்து
Published on

சென்னை:

ரம்ஜான் பண்டிகை நாளை (21-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

திருக்குர்ஆன் புனித நூல் அருளப்பட்ட மேன்மைமிகு ரமலான் மாதத்தின் 30 நாட்கள் நோன்பிருந்து ரம்ஜான் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறைத்தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை, எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனைத் தொழுது, ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இறைவன் அனைத்து நலன்களையும் வழங்கிட பிரார்த்திக்கிறேன்.

இறைத் தூதர் நபிகள் நாயகத்தின் போதனை களான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதா னமும் தழைத்திட உறுதி யேற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், திராவிட வெற்றிக்கழக தலைவர் மல்லை சத்யா ஆகியோரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com