தமிழக செய்திகள்

திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளனர் - தமிழ்நாடு அரசு தகவல்

திபெத்தில் சிக்கி உள்ள 39 தமிழர்களும் நலமாக உள்ளனர்.

திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

நேபாள பெருவெள்ளம்

நேபாளத்தில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானார் மாயமாகி உள்ளனர்.

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த பேரிடரில் சிக்கியவர்களை தேடி மீட்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.

சுற்றுலா சென்ற தமிழர்கள்

நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற தமிழர்களும் இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கினார்கள். அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

இதற்கிடையே, நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க தமிழக அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

21 தமிழர்கள் மீட்பு

21 தமிழர்கள் தமிழகம் திரும்பிய நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்கள் பலரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் மத்திய அரசுடன் இணைந்து தொடர் மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அமைச்சர்கள் குழு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

39 தமிழர்கள் பாதுகாப்பு

திபெத்தில் சிக்கி உள்ள 39 தமிழர்களும் நலமாக உள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக உள்ள நிலையில் நாளை நேபாளத்திற்கு அழைத்து வரப்பட்டு டெல்லி அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

நேபாளத்திலிருந்து டெல்லி வந்தடைந்ததும் 33 பேர் கோவைக்கும், 6 பேர் சென்னைக்கும் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.