நேபாள வெள்ளத்தில் உயிர்தப்பிய 21 தமிழர்கள் சென்னை திரும்பினர்

தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையை கண்டறிந்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தி இருந்தார்.
Tamilans Arrive Chennai
Published on

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 21 தமிழர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

கடந்த புதன்கிழமையன்று நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை. தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில், நேபாளத்துக்கு சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருந்த தமிழக முதலமைச்சர் விஜய், மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்யவும், தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையை கண்டறிந்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தி இருந்தார்.

டெல்லியில் தமிழக அமைச்சர்கள்:

அதன்படி தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் ராஜ்மோகன், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் ஆகியோர் டெல்லியில், மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்தனர்.

அப்போது, நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்த தமிழர்களை மீட்டு பாதுகாப்பாக அழைத்து வருவது தொடர்பாக மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

சென்னை திரும்பிய தமிழர்கள்:

இந்நிலையில் காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு, 21 தமிழர்களுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் மதியம் 3.45 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. இதன்பின்னர் தமிழர்கள் 21 பேரையும் தமிழ்நாடு அமைச்சர்கள் நேற்று நேரில் வரவேற்றனர்.

இதன்பின்னர் இரவு 8 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர்கள், நேற்று இரவு 11.15 மணியளவில் சென்னை வந்தடைந்தனர். விமான நிலையம் வந்த 21 பேரையும் தமிழக அமைச்சர்கள் என்.ஆனந்த், சரத்குமார் ஆகியோர் நேரில் வரவேற்றனர்.

மீட்கப்பட்ட 21 நபர்களும் திருச்சி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களை இனிப்புகள் வழங்கி உறவினர்கள் வரவேற்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com