தமிழக செய்திகள்

திருப்பத்தூர் இரட்டை கொலை: கனிமொழி, உதயநிதி கண்டனம்

சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இந்த Dummy முதலமைச்சர் முன் வர வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே காலிமனையில் ஆண், பெண் என இருவரும் வெட்டி படுகொலை செய்யபட்ட விவகாத்தில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு முன்வர வேண்டும் என அரசிற்கு திமுக எம்பி கனிமொழி,எதிர்கட்சி தலைவர் உதய்நிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளனர்.

இரட்டை படுகொலை சம்பவம்

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே காலிமனையில் ஆண், பெண் என இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அருகேயுள்ள தேராணபதி பகுதியிலுள்ள தனியார் காலிமனைபகுதியில் இந்த சம்பவனமானது நிகழ்ந்துள்ளது.

காவல்துறை வழக்குபதிவு

காரில் வந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த ஆண் திருவண்ணாமலையை சேர்ந்த ரஞ்சித் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் திருப்பத்தூர் காவல் துறை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் பெண் உட்பட இருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியளிப்பதாக திமுக எம்பி கனிமொழி மற்றும் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளனர்

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள சமூகவலை தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

எத்தனை கண்டனங்கள் எழுந்தாலும், எத்தனை உயிர்கள் பறிபோனாலும், எதுவுமே உறைக்காத உணர்வற்ற ஆட்சியாக இருக்கும் இந்தத் தவெக ஆட்சியாளர்களிடம் இனி என்னதான் சொல்வது?

இந்தப் படுகொலைகளைத்தான் தவெக அரசின் காவல்துறையால் தடுக்க முடியவில்லை. குறைந்தபட்சம் குற்றவாளிகளையாவது விரைந்து கண்டறிந்து கைது செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு முன் வர வேண்டும்

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட டம்மி முதலமைச்சர் முன்வர வேண்டும்திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் இரட்டைக்கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

பல்லாவரத்தில் ஆகாஷ் எனும் இளைஞர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.இதற்கும் போலீஸ் DGP-ஐ விட்டு புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்து சமாளிக்கப் போகிறாரா Dummy CM?

ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்த சோப்ளாங்கி அரசு செய்து கொண்டிருக்கிறது.

இனியாவது, பழிபோடும் Tactics-ஐயும், Reels Optics-ஐயும் விட்டு விட்டு, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இந்த Dummy முதலமைச்சர் முன் வர வேண்டும் என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT