திருப்பத்தூரில் பட்டப்பகலில் ஆண், பெண் வெட்டிக்கொலை- மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

கொல்லப்பட்டவர் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Double Murder
Published on: 

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே காலிமனையில் ஆண், பெண் என இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெங்கடேஸ்வரா நகரில் உள்ள பிளாட்டில் இருவரை வெட்டிக்கொன்றுவிட்டு தப்பிய மர்ம நபர்களை காவல்துறை வலைவீசி தேடி வருகிறது.

45 வயது மதிக்கத்தக்க ஆண், 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை கொலை செய்தது யார்? என்ன காரணம்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்லப்பட்டவர் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. உடனிருந்த பெண் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

X