காவிரி தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவர் பதவி நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருப்பது மற்றும் அக்குழுவின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலிலும் நதிநீர் உரிமை விவாதங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.
தமிழக அரசுக்கு காவிரி நதிநீர் விவகாரங்களில் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதற்காக 1990-ஆம் ஆண்டு இந்த காவிரி தொழில்நுட்பக் பிரிவு உருவாக்கப்பட்டது. இக்குழுவின் துணைத் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் கடந்த ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு சுமார் நான்கு மாதங்களுக்கும் மேலாக அந்தப் பதவி நிரப்பப்படாமல் காலியாகவே வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இக்குழுவின் முக்கியத்துவத்தை உணராமல் அரசு இதனை முடக்கி வைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாம் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
விளையாட்டுப் பிள்ளைகளின் கையில் சிக்கிய பொம்மைபோல் த.வெ.க. என்னும் திறமையற்றவர்களின் கையில் சிக்கியுள்ள தமிழக அரசு, தற்போது காவிரி பிரச்சனை குறித்து எந்தவித புரிதலில் உள்ளது என்பதே தெரியவில்லை.
கர்நாடக காங்கிரஸ் ஆட்சிக்கு பல முனைகளில் இருந்து அழுத்தம் கொடுத்து காவிரியில் தமிழகத்தின் உரிய பங்கு நீரைப் பெறுவதற்கு துப்பில்லாமலும், சர்வாதிகார மனப்பான்மையோடு 'காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன்" என்று கர்நாடக முதலமைச்சர் கொக்கரிப்பதை அடக்க வழி தெரியாமலும், மைனாரிட்டி தவெக அரசின் முதலமைச்சர்விஜய் திணறுவதும், தடுமாறுவதும் வாடிக்கையாகிவிட்டது.
தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் இடையே உள்ள காவிரி நீர் தாவாவைத் தீர்க்க காவிரி தொழில்நுட்பப் குழு ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவின் துணைத் தலைவர் திரு செல்வராஜ் அவர்கள், கடந்த ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை இந்த ந.வெ.க. அரசு, நான்கு மாத தாமதத்திற்குப் பிறகு, அதாவது இம்மாதம் 9-ஆம் தேதியன்று
ஏற்றுக்கொண்டதாகவும் விரைவில் அந்தப் பதவிக்கு வேறொருவர் நியமிக்கப்ப உள்ளதாகவும் கூறி இருக்கிறது. கும்பகரணனைக்கூட தூக்கத்தில் இருந்து எழுப்பி விடலாம் இந்த மைனாரிட்டி ஆட்சியாளர்களை தட்டி எழுப்புவது என்பது குதிரைக் கொம்பாக உள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் காவிரி மேலாண்மை ஆணையம் ஒழுங்காற்றுக் குழு பலமுறை கடி ஒவ்வொரு முறையும் கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்தின் உரிய பங்கு நீராக, முறைவைத்து எவ்வனவு TMC தண்ணீர் திரந்துவிடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ் நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றபோது. பல்வேறு குளறுபடிகளுடன் காவிரி நீர் பிரச்சனை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தவெக ஆட்சியில், காவிரி தொழில்நுட்பக் குழு என்ற ஒன்று கடந்த நான்கு மாதங்களாக முழுமையாக செயல்படாமல் முடங்கிப் போய் உள்ளதால், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காவிரி நீரையும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி முழுமையாகப் பெற முடியவில்லை.
இதனால் இந்த த.வெசு அரசால் குறுவை சாகுபடிக்கு குறித்த காலத்தில் தண்ணீர் திறந்துவிட முடியவில்லை. காவிரியில் வரும் ஜனவரி மாதம் வரை முழுமையாக தண்ணீர் திரந்துவிட்டால்தான் சம்பா சாகுபடியில் முழு விளைச்சலைப் பெற முடியும் என்ற நிலையில், தற்போது மேட்டுர் அணையில் 54 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் சம்பா சாகுபடிக்கும் முழுமையாக தண்ணீர் வழங்கமுடியாத சூழ்நிலை உள்ளது.
இந்த த.வெ.க. அரசும், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை முழுமையாகப் பெறுவதற்கு எந்த உறுதியான நடவடிக்கையையும் எடுக்காமல் மழுப்பி வருகிறது. இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை மற்றும் சம்பா சாகுபடியையும் மேற்கொள்ள முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். தமிழகத்தின் பல இடங்களில் பொதுமக்கள் குடிநீருக்காகப் போராடுவதும்; சாலை மறியல் செய்வதும் என்று ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
தமிழக மக்களின் குடிநீர்ப் பிரச்சனையையும் டெல்டா விவசாயிகளின் பாசனப் பிரச்சனையையும் தீர்ப்பதற்கு பதிலாக, பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் உற்சாகமாக முதலமைச்சர் பங்கேற்பது 23-ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறது.
தன்னுடைய விளையாட்டுத்தனத்தையெல்லாம் கைவிட்டுவிட்டு, உடனடியாக காவிரிப் பிரச்சனையில் சுவனம் செலுத்தி, காவிரி தொழில்நுட்பக் குழு முழுமையாக செயல்பட அனைத்து பதவிகளையும் நிரப்ப வேண்டுமென்று இந்த த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்.
என்று தெரிவித்துள்ளார்.