

காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை தவெக அரசு கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்கள் காவிரி நீரை நம்பியே உள்ளன.
வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இல்லாததால் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.
காவிரி நதிநீர் ஆணைய உத்தரவுபடி தமிழகத்துக்குரிய நீரை திறந்துவிட கர்நாடகம் மறுத்து வருவதால் டெல்டா மாவட்டங்கள் வறண்டு வருகின்றன.
இந்த விவகாரம் தற்போது இரு மாநிலங்களுக்கு இடையே பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்துக்கு 4% டி.எம்.சி. நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகம் மறுத்துவிட்டது. கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முயற்சித்துள்ளது.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 221-வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* காவிரி பிரச்சனையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பான வரலாறே தவெகவுக்கு தெரியவில்லை.
* காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை தவெக அரசு கூட்ட வேண்டும்.
* கர்நாடக அரசாங்கம் அரசியல் கட்சி தலைவர்களை விவசாயிகளை மதித்து அனைத்து கட்சியை கூட்டியது.
* காவிரி நீர் விவகாரத்தில் அதிமுக, திமுக ஆட்சியில் எவ்வளவு போராட்டம் நடந்தது என மக்களுக்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.