தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் முறைகேடுகளை கண்டித்து இடதுசாரிகள் சார்பாக போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் தலைவர் சண்முகம் தவெக கூட்டணியில் பாமக இடம்பெறுகிறதா என்ற கேள்விக்கு, இதில் சம்பந்தப்பட்ட பாமக எம்.எல்.ஏ செளமியா அன்புமணி அவர்களும், திருமாவளவன் இருவரும் இதனை வதந்தி என்றே கூறியிருக்கின்றனர்.நாங்களும் இதை வதந்தி என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
ஆனால் தவெகவிடமிருந்து இதற்கு ஆம் இல்லை என்ற எந்த பதிலும் இல்லை என்ற கேள்விக்கு, தவெகவை பொறுத்த வரையில் எந்த பிரச்சனையிலும் வெளிப்படைத்தன்மையுடன் கருத்துகளை வெளிப்படுத்துவது இல்லை என்ற கொள்கையை கடைப்பிடித்து கொண்டிருக்கிறார்கள். அதே கொள்கையை தான் பாமக விஷயத்திலும் கடைப்பிடிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தவெக சார்பாக போட்டியிடும் வேட்பாளர், தான் எந்தவிதமான பதவி பலனையும் எதிர்பார்க்காமல் தான் தவெகவில் இணைந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். எதிர்கட்சிகள் இருக்கும் தொகுதிகளில் எல்லாம் ஆளும் கட்சி எதையும் செய்யாது என்று முதலமைச்சரை வைத்துகொண்டே இதை சொல்லியி்ருக்கிறார். அதற்கு பதிலளிக்க வேண்டியது நம்முடைய முதல்வர் தான், முதல்வர் என்பவர் அனைத்து தொகுதிக்கும் உரியவர் என்ற அணுகுமுறை இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.