தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
அப்போது பாமகவின் சட்டசபை குழு தலைவர் சவுமியா அன்புமணி உரையாற்றினார். அவர் கூறியதாவது:
* ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் கூட பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நிகழ்கின்றன.
* கடந்த ஆட்சி தோல்வியடைய முக்கிய காரணமே பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றம் தான். ஆனால் அதே நிலை தான் இன்றும் இருக்கிறது.
* பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பொறுத்தது போதும், பொங்கி எழ வேண்டும்.
* பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அரபு நாடுகளில் தருவதை போல் கடும் தண்டனை தர வேண்டும்.
* தருமபுரி மாவட்டத்தில் 2 ஆறுகள் ஓடியும் குடிக்க சுகாதாரமான நீர் இல்லை.
* தருமபுரி-காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.