தமிழக செய்திகள்

சகோதரத்துவத்துடன் நடத்தும் சமூக நீதி அரசு தவெக!- முதலமைச்சர் விஜய்

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று கூறியபடி அமைச்சரவையில் தற்போது கூட்டணி கட்சியினர் பங்கு பெற்றுள்ளனர்.

17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3-வது நாள் நிகழ்வு தொடங்கியது.

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றினார்.

சட்டசபையில் சலசலப்பு:

திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. சபாநாயகர் அவர்களை அமைதிப்படுத்த முயன்றும் திமுகவினர் கேட்கவில்லை. மேலும் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து தனது பேச்சை தொடர்ந்தார்.

சமூக நீதி அரசு-தவெக:

சமூக நீதி அரசு என்று கூறுபவர்கள் கடந்த ஆட்சியில் எத்தனை தலித் சகோதரர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்று முதலமைச்சர் விஜய் கேள்வி எழுப்பினார்.

தவெக ஆட்சியில் தலித் சகோதரர்கள் 8 பேர் அமைச்சர்களாகியுள்ளனர். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று கூறியபடி அமைச்சரவையில் தற்போது பங்கு பெற்றுள்ளனர். தவெக அனைவரையும் சகோதரத்துவத்துடன் நடத்தும் என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.