மின்வெட்டுப் பிரச்சனைக்கு தவெக அரசின் அதிரடி தீர்வுகள்- முதலமைச்சர் விஜய்

மின் பற்றாக்குறை அல்ல, மாறாகப் பராமரிப்பு மற்றும் விநியோகக் கோளாறுகள் மட்டுமே என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தார்.
TVK government  power cut issue
Published on: 

தமிழகத்தில் கோடைகாலம் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளால் ஆங்காங்கே ஏற்படும் மின்வெட்டுப் பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் கேள்விகளை எழுப்பின. இதற்குப் பதிலளிக்கும் வகையிலும், முதலமைச்சர் விஜய் பேசினார்.

"பவர் கட் இல்லை... வயர் கட்":

முன்னதாக மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்புப் பிரச்சினைகள் குறித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், தமிழகத்தில் நிலவுவது மின் பற்றாக்குறை அல்ல, மாறாகப் பராமரிப்பு மற்றும் விநியோகக் கோளாறுகள் மட்டுமே என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தார்.

மின்னல் வேக நடவடிக்கைகள்:

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் மின்சார வாரியப் பிரச்சனைகள் மிக வேகமாக சரிசெய்யப்பட்டு வருகின்றன. புகார்கள் வரும் இடங்களில் உடனுக்குடன் மின்மாற்றிகள் மாற்றப்பட்டு, தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் தவெக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து, மின்துறையைச் சீரமைப்பதில் அரசு காட்டும் தீவிரத்தை அக்கட்சியினர் மேடைகளில் விளக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com