தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போதுதான் தெரியவருகிறது- தி.மு.க. மீது சண்முகம் குற்றச்சாட்டு

ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு செல்வது சகஜம். கோடிகளை கொடுத்து வாங்குவது சரியல்ல.

கோவையில் சி.பி.எம். மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* 4 எம்எல்ஏக்கள் த.வெ.க.வில் சேர்ந்தபோதே இதை ஊக்குவிக்க வேண்டாம் எனக்கூறினோம்.

* எம்.எல்.ஏ.க்கள் தாமாகவே முன்வருவதாக கூறினர், அவர்களை சேர்த்து ஏன் ஊக்கம் கொடுக்க வேண்டும் எனக்கேட்டோம்.

* அதிமுக உட்கட்சி பூசலால்தான் எம்எல்ஏக்கள் ஆதரவு. ஆட்சிக்கு என தனியே ஆதரவளித்தாக தெரியவில்லை.

* ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு செல்வது சகஜம். கோடிகளை கொடுத்து வாங்குவது சரியல்ல.

* தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது.

* விரைவில் தேர்தல் என மு.க.ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போதுதான் தெரியவருகிறது.

* ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

* ஆட்சி அதிகாரத்தில் இல்லாததை தி.மு.க.வால் ஏற்க முடியவில்லை என கூறினார்.

முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டு அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.