தமிழக செய்திகள்

கோவையில் மழை - முதலமைச்சர் விஜயின் கேரள பயணம் ரத்து

மோசமான வானிலை இருப்பதால் ஹெலிகாப்டரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கோவையில் பெய்து வரும் மழை காரணமாக முதலமைச்சர் விஜயின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெரியார் அறிவுலகம்

கோவை நகரின் மத்திய பகுதியான காந்திபுரம் பஸ்நிலையம் அருகே 6.98 ஏக்​கர் பரப்​பள​வில் 7 தளங்​களு​டன் ரூ.300 கோடி மதிப்​பில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்துவைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதையடுத்து, ரூ.408 கோடி மதிப்பிலான 89 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். ரூ.34.72 கோடியில் 9,343 பேருக்கு முதலமைச்சர் விஜய் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ரூ.32.32 கோடி மதிப்பில் 144 புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

முதலமைச்சர் விஜய்

பெரியார் நூலக திறப்பு விழா முடிந்ததும் முதலமைச்சர் விஜய் கேரளம் மாநிலம் திருச்சூர் புறப்பட்டு செல்ல இருந்தார். கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் கேரளம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தார். திருச்சூரில் நவராத்திரி விழாவில் பங்கேற்க இருந்தார்.

கொட்டும் மழை

இந்நிலையில், கோவையில் பெய்து வரும் மழை காரணமாக முதலமைச்சர் விஜயின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மோசமான வானிலை

மோசமான வானிலை இருப்பதால் ஹெலிகாப்டரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் முதலமைச்சர் விஜயின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாலை 4 மணி வரை மழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே கேரளாவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தனி விமானத்தில் முதலமைச்சர் விஜய் மீண்டும் சென்னை திரும்புகிறார்.

SCROLL FOR NEXT