ரூ.34.72 கோடியில் 9,343 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - முதலமைச்சர் விஜய் வழங்கினார்

குழந்தைகளுக்கான நூலகம், புத்தகம் படிக்கும் பிரிவு, அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
CM Vijay
Published on: 
Summary

வீடற்றவர்களுக்கு ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட வீடுகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார். தகுதியானவர்களுக்கு இ-பட்டா வழங்கினார்.

கோவை நகரின் மத்திய பகுதியான காந்திபுரம் பஸ்நிலையம் அருகே தந்தை பெரியார் பெயரில் பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் விஜய்

இந்த நூலகத்தில் புத்தகங்கள் மட்டுமல்லாமல் இன்றைய காலத்துக்கேற்ப இ-புத்தகங்கள் மற்றும் அறி​வியல் உபகரணங்​களு​டன் கூடிய அறி​வியல் மையம், விண்​வெளியை கண்​டு களிக்​கும் வகை​யில் கோள ரங்​கமும் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த நூலகத்துக்கு பெரியார் அறிவுலகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

6.98 ஏக்​கர் பரப்​பள​வில் 7 தளங்​களு​டன் ரூ.300 கோடி மதிப்​பில் நூலக கட்டுமான பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று காலை பெரியார் அறிவுலகம் திறப்பு விழா நடந்தது.

விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு பெரியார் அறிவுலகத்தை திறந்துவைத்து பொதுமக்கள் பயன் பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பெரியார் சிலை திறப்பு

முன்னதாக அவர் நூலக நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு இருந்த பெரியார் சிலையை திறந்து வைத்தார். புத்தக வடிவில் அமைக்கப்பட்டு இருந்த நூலக முகப்பு பகுதியையும் பார்வையிட்டார். பின்னர் பெரியார் அறிவுலகம் கல்வெட்டினை திறந்து வைத்தார். தொடர்ந்து அறிவுலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பறை, அறிவியல் மையம், குழந்தைகளுக்கான நூலகம், புத்தகம் படிக்கும் பிரிவு, அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

அதன்பின் நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு சென்றார். அதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

நலத்திட்ட உதவிகள்

அரசு விழாவில் முதலமைச்சர் விஜய்,

* ரூ.408 கோடி மதிப்பிலான 89 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.

* ரூ.34.72 கோடியில் 9,343 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

* ரூ.32.32 கோடி மதிப்பில் 144 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

* பெண்களுக்கு சுய உதவிக்குழு கடன்கள், சமுதாய முதலீட்டு நிதி, ரூ.9 லட்சத்தில் இல்லம் ஆகியவற்றை வழங்கினார்.

* வீடற்றவர்களுக்கு ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட வீடுகளை வழங்கினார். தகுதியானவர்களுக்கு இ-பட்டா வழங்கினார்.

* மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு அவரவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக்கால் மற்றும் தகுதியானவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.

* திருமண நிதியுதவி, இயற்கை மரண நிதியுதவி, வீடு கட்டுவதற்கான கடன், புதிய குடும்ப அட்டையை வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ராஜ்மோகன், சம்பத் குமார், விக்னேஷ், கலெக்டர் பவன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கேரளம் செல்கிறார்

முதலமைச்சர் விஜய், நூலக திறப்பு விழா முடிந்ததும் கேரளம் மாநிலம் திருச்சூர் புறப்பட்டு செல்கிறார்.

மாலையில் திருச்சூர் நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் ஹெலிகாப்டரில் கோவை வருகிறார். பின்னர் இரவில் தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். அவர் சென்னை புறப்பட்டு செல்லும் வரை போலீஸ் பாதுகாப்பு நீட்டிக்கப்பட உள்ளது. பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. டிரோன் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com