தமிழக செய்திகள்

மானியக் கோரிக்கையில் எழுந்த நீட் தேர்வு விவகாரம்: காங்., பாஜக உறுப்பினர்கள் சொன்னது என்ன?

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மிகப்பெரிய சவாலாக உள்ளன. இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அரசு அடக்க வேண்டும்.

அனைத்து திட்டங்களையும் திருத்திக்கொண்டு இருக்கும்போது மாணவர்களுக்கான இந்த திட்டத்தை திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? என கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட் பேசுகையில்,

* எனது வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சியினருக்கு நன்றி.

* ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுத்து, கூட்டணி கட்சிக்கு மரியாதை தந்தவர் விஜய்.

* தவெக பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கான பட்ஜெட்.

* தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.

* காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டியதற்கு நன்றி.

* காங்கிரஸ் திட்டங்களை மாற்றும் பாஜக, நீட் தேர்வை ஏன் மாற்றவில்லை?

* 100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக முயற்சி செய்கிறது.

* இருமொழிக் கொள்கையை பாதுகாப்பதிலும் காங்கிரஸ் உறுதியாக இருக்கும்.

* IREL அரிய வகை கனிம நிறுவனத்தால் கடல் அரிப்பு, கடற்கரை சுருங்கி விட்டது.

* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன்.

* மீனவர்கள் கைது பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

* கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ் தேவை.

* பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மிகப்பெரிய சவாலாக உள்ளன. இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அரசு அடக்க வேண்டும்.

* குளச்சல் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

* தாமிரபரணி, கோதையாறு, பரளியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் தேவை.

* கன்னியாகுமரியில் உள்ள அனைத்து குளங்களையும் இணைக்க வேண்டும் என்றார்.

இதனை அடுத்து பேசிய பா.ஜ.க. எம்.எம்.எல்.ஏ. போஜராஜன், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் நீட் வந்தது என தாரகை கத்பட் கூறி விட்டார் என்றார்.

அதற்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட்,

* நீட் எந்தெந்த மாநிலத்திற்கு தேவையோ அந்த மாநிலத்திற்கு கொண்டு வரலாம் என்று தான் சொன்னோம்.

* காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த ஒவ்வொரு சட்டத்தையும் பில் திருத்தம் என்ற பெயரில் அனைத்து சட்டத்தையும் பாஜக அரசு திருத்திக்கொண்டு இருக்கிறது.

* மக்களுக்கு எது தேவையோ அதை காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்தோம்.

* அனைத்து திட்டங்களையும் திருத்திக்கொண்டு இருக்கும்போது மாணவர்களுக்கான இந்த திட்டத்தை திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? என கேள்வி எழுப்பினார்.