17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3-வது நாள் நிகழ்வு தொடங்கியது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* எங்களுக்கும் நக்கல் நையாண்டியுடன சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசத் தெரியும்.
* தேசிய கீதம் விவகாரத்தில் மரபை மாற்றியதாக போர் போல மாற்றினர்.
* 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் என்ன ஆனது, ஆனால் பேசு பேசு என்கின்றனர்.
* கலைஞர் புகைப்பட திறப்பு விழாவில் தேசிய கீதத்திற்கு பின் தமிழ்த்தாய் வாழ்த்து என கூறியது நினைவுள்ளதா?
* சபையில் நடந்த கலைஞர் பட திறப்பு விழாவில் தேசிய கீதத்திற்கு பின்னர் தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதை நான் கேட்டால் குடியரசுத் தலைவர் பங்கேற்ற நிகழ்வு என கூறுவர்.
* தமிழ் தமிழ் என கூறி கொண்டு திமுக போல் இரட்டை வேடம் போடமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.