தமிழக செய்திகள்

அரசியலில் புயலை உருவாக்கி சரித்திர சாதனை படைத்துள்ளார் முதலமைச்சர் விஜய் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இபிஎஸ்-ன் தவறான முடிவுகளால் அதிமுக தள்ளாட்டமான நிலைக்கு சென்று விட்டது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் த.வெ.க. அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் இணைப்பு விழா நடைபெற்றது.

அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இணைந்து உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில் த.வெ.க.வில் இணைந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:

* அரசியலில் புயலை உருவாக்கி ஆட்சியமைத்து சரித்திர சாதனை படைத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

* திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்தது சரியா என யோசித்து தான் தவெகவில் இணைந்துள்ளேன்.

* பணத்தை வைத்து ஆட்சிக்கு வந்துவிடலாம் என எண்ணுகின்றனர்.

* இபிஎஸ்-ன் தவறான முடிவுகளால் அதிமுக தள்ளாட்டமான நிலைக்கு சென்று விட்டது.

* 42 ஆண்டுகள் அதிமுக உறுப்பினராகவும் 25 ஆண்டுகள் தீவிர அரசியலிலும் இருந்தவன் நான்.

* ஒரு தலைவர் சரியான முடிவெடுக்க தவறினால் அந்த இயக்கம் என்னவாகும் என்பதற்கு அதிமுக தான் உதாரணம்.

* தொண்டன் ஒருவர் கொடி பிடித்தால் தான் இயக்கத்தின் தலைவர் கொடியேற்ற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.