அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் முன்னிலையில் இணைப்பு விழா நடைபெற்றது. த.வெ.க.வில் இணைந்தவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதன்பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-
* மாற்றக்கட்சியினர் த.வெ.க.வில் இணையும் விழா ஒரு மாநாடு போல் உள்ளது.
* இளைஞர்களை கவரும் ஆற்றல் உள்ளவராக ஆதவ் அர்ஜூனாவும், புஸ்சி ஆனந்த் பிசி ஆனந்தாகவும் உள்ளனர்.
* முதலமைச்சர் விஜய் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் தான்.
* துரோகிகள் இங்கே வந்துள்ளதாக கூறுகின்றனர், கொஞ்சம் யோசித்து பாருங்கள் எங்கே துரோகம் நடந்துள்ளது என்று.
* திமுகவுடன் கூட்டணி சேர நினைத்தது தான் துரோகம், எடப்பாடி பழனிசாமியுடன் இருப்பவர்கள் தான் துரோகிகள்.
* துரோகிகள் அதிமுகவிலேயே தங்கவிட்டனர், நல்லவர்கள் அனைவரும் தவெகவில் இணைந்துள்ளனர்.
* திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகும் எண்ணத்தை இங்கே வந்துள்ளவர்கள் தகர்த்துள்ளனர்.
* ஜெயலலிதா படத்தை வைத்துக்கொள்ள அனுமதி கொடுத்தவர் முதலமைச்சர் விஜய்.
* அதிமுகவில் இருந்து என்னைத் தூக்கி எறிந்தபோது தாங்கிப்பிடித்தகவர் விஜய் என உணர்ச்சிப்பெருக்குடன் பேசினார்.