பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பங்களித்த சமூகநீதிப் போராளி ஐயா ராமசாமி படையாட்சி அவர்களின் பிறந்தநாளில் அவரது பணிகளை நன்றியோடு நினைவுகூர்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
விடுதலைப் போராட்ட வீரரும் சமூகநீதிப் போராளியுமான இராமசாமி படையாட்சியார் பிறந்தநாள்
சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளில் மக்கள் பணியாற்றிய மாபெரும் தலைவரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பங்களித்த சமூகநீதிப் போராளியுமான ஐயா இராமசாமி படையாட்சி அவர்களின் பிறந்தநாளில் அவரது பணிகளை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
அவரது கோரிக்கையை ஏற்று ஏ.என். சட்டநாதன் அவர்கள் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், சென்னை கிண்டியில் திருவுருவச் சிலை என இராமசாமி படையாட்சியாரைப் போற்றி வணங்கியது கழக அரசு.
உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக வாதாடிய இராமசாமி படையாட்சியாருக்கு என் புகழ் வணக்கம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.