சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக அவர் ஆளுநரிடம் மனு அளித்தார். அவருடன் பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இந்நிலையில், நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசு பொறுப்பில் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டதை ஆளுநரிடம் சுட்டிக்காட்டினோம்.
* பெண் குழந்தைகளிடம் அமைச்சர் விஸ்வநாதன் நடந்த விதம் தவறு என எடுத்துக்கூறினோம்.
* ஆட்சிக்கு வந்து 54 நாட்களில் சட்டம், ஒழுங்கு கடுமையாக சீரழிந்துள்ளது.
* தவெக ஆட்சியில் சொந்தக் கட்சியினரே பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.
* தவெக அரசை கலையுங்கள் என ஆளுநரிடம் கூறவில்லை, அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டனர் எனக்கூறினோம்.
* தவெக அரசு குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியம் என்ன?
* தவெக ஆட்சி பொறுப்பேற்ற 55 நாளில் 100-க்கும் மேற்பட்ட வன்கொடுமை, கொலைகள் நடந்துள்ளதை எடுத்துக்கூறினோம்.
* திமுக ஆட்சிக்கும் தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
* தமிழ்நாட்டில் தற்போது 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் வர வேண்டிய தேவை என்ன?
* ஆளுநர் எங்கெங்கு ஆய்வு செய்ய வேண்டுமென்று அமைச்சர் நிர்மல் குமார் கூற முடியாது.
* எங்கு வேண்டுமானாலும் ஆய்வு செய்ய முழு அதிகாரம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.