தமிழக செய்திகள்

கூவத்தை சீரமைக்க வேண்டும் என்றால் 540 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்- கே.என்.நேரு

சென்னையில் 540 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது.. அவை சரிசெய்வதில் சிக்கல் உள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கே.என்.நேரு உரையாற்றினார்.

அப்போது, பாமக சட்டமன்றக் குழு தலைவர் சவுமியா அன்புமணி எழுப்பிய திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.

கே.என்.நேரு உரை

உள்ளாட்சி துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் மு.க.ஸ்டாலின்.

கோப்புகளை எப்படி பார்க்க வேண்டும் என சொல்லி கொடுத்தவர் கலைஞர். தேர்தல் வந்ததால் இறுதி அறிக்கையை அவையில் வைக்க முடியவில்லை.

தற்போதைய அரசு திருப்புகழ் கமிட்டி அறிக்கையை அவையில் சமர்ப்பிக்கலாம்.

உள்ளாட்சித்துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் மு.க.ஸ்டாலின்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் நாளொன்றுக்கு 5,000 மில்லியன் லிட்டர் குடிநீர் கொடுத்தோம்.

கடந்த 5 ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடர முடியாத நிலையில் உள்ள குடிநீர் திட்டங்களை மீண்டும் தொடர வேண்டும்.

சென்னையில் 540 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. கூவத்தை சீரமைக்க வேண்டும் என்றால் 540 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

எங்களுடன் இருந்த அதிகாரிகள் தான் முழுமையாக இன்றும் நகராட்சி துறையில் பணியாற்றுகின்றனர்.

நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு மேம்படுத்த மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி தந்தது.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரியுடன் முடிகிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT