போதை பொருளை ஒழிக்க 65 சிறப்பு படைகள்- ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னையில் மட்டும் 12 சிறப்பு படைகள் உருவாக்கப்படும்.
TN CM Vijay
Published on

தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்புக்கு ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் ஜோசப் விஜயின் உத்தரவின்பேரில் போதைப்பொருளை ஒழிக்க 65 சிறப்பு படைகளை உருவாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு படைகளில் 65 காவல் ஆய்வாளர்கள், 130 உதவி ஆய்வாளர்கள், 325 காவலர்கள் பணியாற்றுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

37 மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு படையும், சென்னையில் மட்டும் 12 சிறப்பு படைகளும் உருவாக்கப்படும்.

ஆவடி, தாம்பரம், சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை மற்றும் நெல்லை ஆகிய முக்கிய மாநகரங்களில் தலா 2 படைகள் வீதம் உருவாக்கப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com