தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு திடீர் பாதுகாப்பு ஏன்? - கனிமொழி

தவெக எம்எல்ஏக்கள் மீது அடுத்தடுத்து வரும் புகார்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

பண்டிகை நாளில் கொலை அதிகரிப்பது வழக்கம் தான் எனப்பேசிய அமைச்சர் ராஜ்மோகனுக்கு கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

* தீபாவளி கொலைகளை சகஜமாக்கப் பார்க்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்.

* கடந்தாண்டுடன் ஒப்பிடுவதற்கு கொலைகள் எண்ணிக்கை மாநிலத்தின் வளர்ச்சியல்ல.

* கொலைகள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர் ராஜ்மோகன் இப்படி பேசுவதா?

* தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியை எதிர்த்து புகார் தருவோர் மிரட்டப்படுவது வழக்கமாகி விட்டது.

* காரணம் கூறி தங்களை நியாயப்படுத்துவதே தவெகவினர் வேலையாக இருக்கிறது.

* தவெக அரசு ஆபத்தான விஷயங்களை கற்றுக்கொள்கிறது

* தவெக எம்எல்ஏக்கள் மீது அடுத்தடுத்து வரும் புகார்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

* ஆபாச குறுஞ்செய்தி அனுப்பவில்லை என எம்எல்ஏ கூறும் நிலையில் கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு திடீர் பாதுகாப்பு ஏன்?

* த.வெ.க ஆட்சிக்கு வந்தால் குற்றங்களே நடக்காது என்று சொன்னார்கள் ஆனால் த.வெ.க தமிழ்நாட்டையே சூறையாடிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT